தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த அடிப்படையில் நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் மழை பெய்ய இருக்கிறது. இதன் காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.