கிராம நிர்வாக அலுவலகத்திற்கு கைலியுடன் வரக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைத்த விஏஓ காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டு இருக்கிறார். தஞ்சை மாவட்டம் செங்கிபட்டியில் வசித்து வரும் ஒருவர் தனது மகனுக்கு ஜாதி சான்றிதழ் வாங்குவதற்காக கிராம நிர்வாக அலுவலகம் சென்றுள்ளார்.

அப்போது கைலி அணிந்து உள்ளே வரக்கூடாது என விஏஓ கரிகாலன் அவரை திருப்பி அனுப்பி இருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். இந்நிலையில் விஏஓ கரிகாலன் மீது நடவடிக்கை பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.