விழுப்புரத்தில் நடந்த அதிமுக 52ஆவது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம்,   சினிமாவுல நடிக்கிற இவனை எல்லாம் தூக்கிட்டு வந்து உட்கார வச்சா இந்த மாதிரி வசனம் பேசிக்கிட்டு… தலைப்பு செய்தி கொடுத்துகிட்டு… இப்படி தான் இருப்பாங்க,  வேற ஒன்னும் நடக்காது.

இந்த ஆட்சியில் என்ன நடக்குது ? திமுக எப்போதெல்லாம் தமிழகத்தினுடைய ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கிறதோ,  அப்போதெல்லாம் தமிழகத்தினுடைய உரிமைகள் பறிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. விட்டுக் கொடுக்கப்பட்டிருக்கிறது.  திமுக எதிர்த்து போராடியது கிடையாது.

இன்றைக்கு காவிரியை நம்பி இருக்கின்ற குருவை சாகுபடி… இந்த அரசு பெரிய அறிவாளி மாதிரி…. எல்லாம் தெரிஞ்ச மாதிரி இந்த முதலமைச்சர்…. ஜூன் 12-ம் தேதி கரெக்ட்டா தண்ணீர் திறந்து விடப்படும்,  போய் திறந்து விட்டார். ஜூன் 12 சரி  முதலமைச்சர் தண்ணீரை திறந்து விட்டாரு.  தண்ணி வரும். மழை வரும். காவிரியில் மழை பெய்யும். நல்லா தண்ணீர் வரும் என இதை நம்பி 5 லட்சம் ஏக்கர் விவசாயிகள் பயிர் போட்டார்கள். இன்னைக்கு என்ன ஆயிற்று ?  காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என சொல்லி விட்டான்.

காவேரி நடுவர் மன்றம் சொல்லுது தண்ணி  திறங்க, விடுங்கன்னு… கர்நாடக அரசு  முடியாது என சொல்லிட்டாங்க . உச்ச நீதிமன்றம் திறந்து விடு என சொல்லுது…  திறந்துவிடு முடியாது. திறக்க முடியாது. ஒரு சொட்டு தண்ணீரை கூட தமிழகத்திற்கு நாங்கள் தரமாட்டோம் என்று சொன்னார்கள். என்ன செய்ய வேண்டும் ? ஆண்டு கொண்டிருப்பது யார் ?  இந்த முதல்வர் என்ன நடவடிக்கை எடுத்தார் ? நமக்கு தான்  வலி தெரியும். அவங்க தான் போராடுவாங்க.

அகம்பாவமாக கர்நாடகாவில் இருக்கின்ற காங்கிரஸ் அரசு… அங்க இருக்கிற எதிர்க்கட்சி….  நான்கு மாதங்களுக்கு முன்பு ஆளும் கட்சியாக இருந்த பாரதிய ஜனதா கட்சி…  இன்றைக்கு எதிர்க்கட்சி…. ஆளும் கட்சி காங்கிரஸ்…. இரண்டும் சேர்ந்து கொண்டு,  கர்நாடகாவிலே தண்ணீரை தர மாட்டோம், தரக்கூடாது என்று பந்த்  அறிவிக்கிறார்கள், கடையடைப்பு நடத்துகிறார்கள்.

நம்முடைய வாகனங்கள் அடித்து நொறுக்கப்படுகிறது. ஆனால் தண்ணீரை கேட்டு பெறவேண்டிய முதலமைச்சர் என்ன செய்து கொண்டிருந்தார் ? என்ன பண்ணாரு ? அந்த முதலமைச்சர் தண்ணீரை தர மாட்டோம் என்று சொல்லி டெல்லிக்கு செல்கிறார். துணை முதலமைச்சர் சொல்கிறார்…  அங்கு இருக்கிற பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் செல்கிறார்கள்…

காங்கிரசும் – பாரதிய ஜனதாவும் எலியும்,  பூனையும் போல. ஆனால் தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என்பதிலே அந்த பாரதிய ஜனதா கட்சியும்,  காங்கிரசும் ஒன்றிணைந்து டெல்லிக்கு சென்று, தண்ணீரை நாங்கள் தரமாட்டோம் என்று சொல்கிறார்கள். இங்கு இருக்கிற முதலமைச்சர் என்ன பண்ணாரு ?  டெல்லிக்கு போனாரா ?  நடவடிக்கைஎடுப்பாரா  ? என கேள்வி எழுப்பினார்.