நேற்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியதாக கூறி தற்போது தனது கண்டனத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கையின் வாயிலாக பதிவு செய்துள்ளார். நேற்றைய தினம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அராஜகத்தில் திமுகவினர் ஈடுபட்ட வினர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,  காவல்துறைக்கு அதற்கான அதிகாரங்களை வழங்க வேண்டும் என்ற ஒரு வலியுறுத்தலும் தற்போது கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்குவாரிக்கான ஒப்பந்த புள்ளிகள் பெறப்பட்ட நிகழ்வு நேற்று நடைபெற்றது. போக்குவரத்து துறையின் உடைய அமைச்சரின் உதவியாளர் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர் மற்றும் திமுக நிர்வாகிகள் என்ற பெயரில் சுமார் 300க்கும் மேற்பட்டோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளையே நுழைந்து,  கல்குவாரி டென்டரை தங்களுக்கே தர வேண்டும் என்று தரவேண்டும் என்றும்,

திமுகவினரை தவிர வேறு யாரும் ஒப்பந்த புள்ளி கோரக் கூடாது என்றும் மிரட்டி அராஜகத்தில் ஈடுபட்டதாகவும் அனைத்து ஊடகங்களிலும் நாளிதழில் தொடர்பான செய்தி வந்துள்ளதாகவும் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக தங்களுக்கு

சேவை புரிய மக்கள் வாக்களித்தார்கள் என்பதை திமுகவினர் மறந்துவிட்டு மாநிலமே தங்களுக்கு சொந்தமாகிவிட்டது போல நடந்து கொள்வதாகவும், அரக்கர்கள்,  அசுரர்களை நாம் கண்டதில்லை; அந்தக் குறையை திமுகவினர் போக்குகின்றனர் என்ற கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார் தன்னுடைய கண்டனத்தை எடப்பாடி பழனிச்சாமி பதிவு செய்துள்ளார்.