வரதட்சணை கொடுமை வழக்கில் புதுமண பெண்ணான ரிதன்யா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த வழக்கில் ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகியோர் கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டனர்.
அவர்கள் மூவரின் ஜாமின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை கோவை ஐஜி அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாதுரை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, “வரதட்சணை கொடுமை செய்து எனது மகளை தற்கொலை செய்ய தூண்டிய மூவரையும் கைது செய்து சரியான தண்டனை வழங்க வேண்டும் எனவும், வழக்கில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், உடற்கூறாய்வு முடிவுகள், ஆய்வுக்கூட அறிக்கை, ஆடியோ ரிப்போர்ட் ஆகிய வழக்கு குறித்த அறிக்கைகள் இதுவரை வரவில்லை. காலதாமதம் ஏற்படுகிறது வழக்கை தீவிரமாக விசாரிக்க வேண்டும்.
மேலும் விசாரணை அதிகாரிகள் மீதும் சந்தேகம் வருகிறது எனவே தனிவிசாரணை அதிகாரி நியமிக்க வேண்டும். வழக்கு சிபிஐக்கு மாற்ற வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்
