சவுக்கு சங்கர் குறிப்பிட்ட சமுதாயத்தைப் பற்றி யூடியூபில் பதிவு செய்ததாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஜக ஓபிசி அணி சார்பாக சூர்யா சிவா புகார் அளித்துள்ளார். கடந்த காலங்களில் குற்ற பின்னணி உள்ளவர்கள் மட்டுமே இச்சமுதாயத்தில் இருக்கிறார்கள் எனவும், எந்நேரமும் இளைஞர்கள் வேலைக்குச் செல்லாமல் குடிபோதையில் இருந்து வருவதால் பெண்களுக்கு ஒரு அசௌகரியமான சூழ்நிலை நிலவுகிறது போன்ற கருத்துக்களை குறிப்பிட்ட சமூகத்தை பெரும்பான்மையாக இருக்கும் குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.

சமுதாயத்தில் ஜாதி ரீதியான கலவரங்களை தூண்டுவதற்கும், சமுதாய ரீதியான கருத்துக்களை பதிவு செய்து சட்ட ஒழுங்கை கெடுப்பதற்குமான முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி ஓபிசி அணி சார்பாக இன்று கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் கொடுத்துள்ளோம் என தெரிவித்தார்.