ஐதராபாத்திலிருந்து கர்நாடகாவிற்கு சுற்றுலா வந்த நண்பர்கள் குழுவில் இருந்த சாஜித் என்ற இளைஞர் குடிபோதையில் ஏரியில் மூழ்கி இறந்துள்ளார். இந்த சம்பவம் முழுவதும் கேமராவில் பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீச்சல் தெரியாத சாஜித், ஏரியில் இருந்த நண்பர்களால் தூண்டப்பட்டு குதித்துள்ளார். ஏரியில் இருந்த சில நண்பர்கள் சாஜிதை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. ஏரியில் இருந்த மற்ற நபர்கள் இருவர் கரையில் நின்று கொண்டு செல்போனில் இந்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்துள்ளனர்.

சாஜித் தண்ணீரில் போராடிய போதிலும், அவரைக் காப்பாற்ற அவர்கள் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. முழு சம்பவமும் வீடியோவில் பதிவாகி இருக்கும் நிலையில், சாஜித் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். சுற்றுலா சென்ற நண்பர்கள் குழுவினர் குடிபோதையில் இருந்ததும், மகிழ்ச்சியான சுற்றுலா பயணம் சோகத்தில் முடிந்ததும் பின்னர் தெரியவந்தது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.