உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை ஒழிப்பதற்காக பல்வேறு நாடுகளின் தடுப்பூசிகள் பெரும் பங்காற்றின. அதில் முக்கியமாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி கொரோனாவை ஒழிப்பதற்காக போராடியது. இந்த தடுப்பூசியை ரஷ்யாவைச் சேர்ந்த 18 அறிவியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இந்த 18 பேர் கொண்ட குழுவில் அண்ட்ரூ பொட்டிக்வ் என்ற விஞ்ஞானியும் ஒருவர் ஆவார். இந்த நிலையில் அண்ட்ரூ தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.

இந்த குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அண்ட்ரூவின் உடலை கைப்பற்றினர். இது தொடர்பான விசாரணையில் 29 வயதுடைய இளைஞர் ஒருவர் அண்ட்ரூ கழுத்தை பெல்டால் நெறித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து போலீசார் அவரை உடனடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட அண்ட்ரூ ரஷ்யாவின் உயரிய விருதை கடந்த 2021 ஆம் ஆண்டு அந்நாட்டு அதிபர் புதின் கையால் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.