ஐரோப்பிய நாடுகளில் பெலாரஸ் தான் கடைசி சர்வாதிகார நாடு. அந்நாட்டில் மிக முக்கிய வியாஸ்னா என்ற மனித உரிமை குழுவை கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அலெஸ் பியாலியாட்ஸ்கி என்பவர் நிறுவியுள்ளார். இவரை பெலாரஸின் அரசு படைகள் அடிக்கடி சீண்டி வந்தது. மேலும் கடந்த 2020 மற்றும் 21 ஆம் ஆண்டுகளில் அந்நாட்டு அரசுக்கு எதிராக அவர் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் பொது ஒழுங்கை மீறியதாகவும், பண கடத்தல் தொடர்பாகவும், நிதி உதவி அளித்தல் குற்றச்சாட்டுக்காகவும் அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு அந்நாட்டு அரசு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அவருடைய தோழர்கள் இருவருக்கும் 9 மற்றும் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவினால் ஐநா மற்றும் உலக நாடுகள் கவலையில் உள்ளது.