தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் மீனா. தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த மீனா தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். கடந்த 1982-ம் ஆண்டு சிவாஜி நடிப்பில் வெளியான நெஞ்சங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா. அதன்பிறகு ரஜினி நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானார்.

அதன் பிறகு பல படங்களில் நடித்த மீனா ரஜினியுடன் சேர்ந்து எஜமான் மற்றும் முத்து போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை மீனா திரையுலகில் அறிமுகமாகி தற்போது 40 வருடங்கள் ஆகிவிட்டது. இதை கொண்டாடும் விதமாக மீனா 40 என்ற பெயரில் தனியார் நிறுவனம் ஒரு நிகழ்ச்சி நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு மீனாவை வாழ்த்தினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் ராதிகா, சங்கவி, சரத்குமார், சினேகா, தேவயானி, ரோஜா, ராஜ்கிரண், கே. பாக்யராஜ், கே.எஸ் ரவிக்குமார், தயாரிப்பாளர் போனி கபூர் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீனாவை வாழ்த்தியுள்ளனர்.