கன்னட சினிமாவில் தற்போது கப்ஜா என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. கேஜிஎஃப் பாணியில் உருவாகியுள்ள கப்ஜா திரைப்படம் 7 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் கீச்சா சுதீப், உபேந்திரா, சிவராஜ்குமார் போன்ற கன்னடத்தில் முன்னணி ஹீரோக்கள் நடித்துள்ளனர். அதன் பிறகு நடிகை ஸ்ரேயா ஹீரோயின் ஆக நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது கப்ஜா படத்தின் டிரைலர் வீடியோ வெளியாகி உள்ளது. இதில் அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்று கே ஜிஎஃப் பாணியல் அட்டகாசமாக இருக்கிறது. மேலும் இந்த ட்ரெய்லர் வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.1`