கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தர்மபுரம் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி வேலை பார்க்கும் ஸ்ரீபாரத்(29) என்ற மகன் இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று ஸ்ரீபாரத் தனது வீட்டில் திடீரென விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஸ்ரீபாரத்தை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை ஸ்ரீபாரத் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஸ்ரீபாரத் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.