காஞ்சிபுரம் ஒன்றியம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊத்துக்காட்டில் 3.5 கோடி மதிப்பிட்டில் புதிதாக கட்டப்பட்ட இருளர் பழங்குடியின ஏழை மக்களுக்கு கட்டப்படும் குடியிருப்பு  தரமற்ற முறையில் கட்டப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அதிகாரிகளை கண்டித்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வந்தது. இதனைத் தொடர்ந்து அனைத்து செய்தி ஊடகத்திலும் இந்த வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து வாலாஜாபாத் ஒன்றிய பொறியாளர் சாருலதா  மற்றும் கள ஆய்வாளர் சுந்தரவனம் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட  ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.