ஐபிஎல் 16-வது சீசன் போட்டிகள் மார்ச் 31-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதன் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் கேட்ச் பிடிக்கும் என்ற போது அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது.

இதனால் போட்டியிலிருந்து அவர் பாதியிலேயே வெளியேறினார்.‌ இந்நிலையில் தற்போது கேன் வில்லியம்சன் முழு ஐபிஎல் போட்டியிலும் இருந்து விலகுவதாக குஜராத் அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் கேன் வில்லியம்சன் விரைவில் குணமடைய வேண்டும் என தற்போது ரசிகர்கள் ட்வீட் செய்து வருகிறார்கள்.