IPL கிரிக்கெட் தொடரின் 5-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நேற்று நடந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக் கொண்டது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியானது பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த வகையில் முதலாவதாக விளையாடிய மும்பை 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்து குவித்தது. அதன்படி  திலக்வர்மா 46 பந்துகளில் 9 பவுண்டரி, 4 சிக்சர்கள் உடன் 84 ரன்கள் (நாட்அவுட்) எடுத்து குவித்தார்.

பெங்களூரு அணியின் சார்பாக கரண் சர்மா 2 விக்கெட் கைப்பற்றினார். அதன்பின் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களம் இறங்கியது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களான விராட்கோலி மற்றும் டூ பிளசிஸ் இருவரும் அதிரடியாக விளையாடினர். கடைசியில் பெங்களூரு அணியானது 172 ரன்கள் எடுத்து அபார வெற்றியடைந்தது. 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியானது தன் முதல் வெற்றியை பதிவுசெய்தது.