செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, மக்களவையில் எல்லாருமே ஆதரித்த ஒரு மசோதா அப்படினா…   மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா. திராவிட முன்னேற்ற கழகம் இதை நிறைவேற்ற வேண்டும் என்று தலைவர் கருணாநிதியாகட்டும்,  நம்முடைய முதலமைச்சர் தளபதியாக இருக்கட்டும் தொடர்ந்து வலியுறுத்த கூடிய  மசோதாவாக இருக்கிறது.

இதற்காக பலமுறை பிரதமருக்கு வலியுறுத்தி கடிதம் எழுதி இருக்கிறார்கள். இப்படி பட்ட சூழலிலே இத்தனை ஆண்டுகள் கழித்து…  2 முறை ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு…  பாஜக இப்பொழுது தான் இந்த மசோதாவை நிறைவேற்றுகிறோம் என்று தீடீர் என எந்த அறிவிப்பும் இல்லாமல், அதை பாராளுமன்றத்திலே கொண்டு வருகிறார்கள்.

ஆனால் கொண்டு வரும்பொழுது,  முதல்ல  மக்கள் தொகைக்கான கணக்கெடுப்பு  முடியவேண்டும்.  அதற்கு பிறகு ஒவ்வொரு தொகுதிக்கான மறு சீரமைப்பு  நடந்து முடிவுபெற்ற பிறகு தான்,  இது செயல்முறைக்கு கொண்டுவரப்படும் அப்படினு சொல்லும்பொழுது…   

எத்தனை ஆண்டுகள் இதுக்கு ஆகும் ? அப்படிங்குறது யாராலுமே குறிப்பிட்டு சொல்ல முடியாத ஒரு சூழ்நிலை இருக்கிறது. இதைத்தான் நம்முடைய முதலமைச்சர் அவர்களும் அவர்களுடைய அறிக்கையிலே குறிப்பிட்டு சொல்லிருக்கிறார்கள். இது எல்லாம் என்று நிறைவேற்றப்பட்டு, என்று அமலுக்கு கொண்டு வரப்படும் என்ற மிக பெரிய ஒரு கேள்வி எல்லாருக்கும் இருக்கிறது என தெரிவித்தார்.