செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் அமீர், தியேட்டர் – சினிமா வியாபாரம் –  வர்த்தகம். பணம் போட்டால் லாபம் சம்பாதிக்கணும்ன்னு தயாரிப்பாளர் வராரு. படம் போட்டா கேன்டீன் ஓடுமா ? கரண்ட் பில் கட்ட முடியுமா ?  வாடகை கட்ட முடியுமா ?  அப்படினு தியேட்டர்காரர் இருக்காரு, அதுவும் வியாபாரம். நீங்க சொன்ன நபர் இறந்துட்டாருன்னு சொன்னீங்களே … 

அந்த இடத்துல நான் இருந்தேன். அங்க கார்ல உட்காந்து இருந்தோம். கோயம்பேடு ரோஹினில பாத்துட்டு எனக்கு ரொம்ப வேதனையாகிடுச்சி. அநியாயமா ஒரு உயிர் திரைப்படம் பாக்குறதுக்காக போயிருச்சே அப்படின்னு…. நடிகர் சித்தார்த்துக்காக பேசலைன்னு சொல்ல முடியாது. சித்தார்த்துக்காக பஸ்ட்பிரகாஷ் ராஜ் அவர்கள் குரல் கொடுத்தார்கள்.

நிறைய பேரு குரல் கொடுத்தாங்க.  நீங்க புரிஞ்சிக்கிறதுக்காக சொல்லுறேன்… ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு பிரச்சனை ஏற்படுது. இப்போ நடிகர் விஜய் அவர்களுடைய திரைப்படம் வரும் போது பிரச்சனை ஏற்படுது. அப்போ சித்தார்த் குரல் கொடுத்தாரா ? அப்படின்னு கேள்வி வருமா ? இல்லையா?  இத நீங்க அப்படி பாக்கக்கூடாது. பொதுவாக அரசு எந்த நிலைப்பாட்டுல இருக்கு ? மக்கள் என்ன மன நிலையில இருக்காங்க ? என்று தான் பாக்கணும்.

தனிப்பட்ட முறையில ஒவ்வொவர் பிரசனைக்கு  இவரு குரல் கொடுத்தாரா ? இவர் கொடுத்தாரான்னு தேடிட்டே இருந்திங்கன்னா….  ஒட்டுமொத்தமா ஒரே நாலு என்னைக்குமே எதுக்குமே , இவங்க குரல் கொடுத்ததே கிடையாது என்கிறது மறுக்க முடியாத உண்மை ஒன்னே ஒன்னு விதிவிலக்கா ஜல்லிக்கட்டு நடந்துருக்கு. இந்த ஒன்னு தானே தவிர,  இதுல நீங்க போய்கிட்டு  இவர் வரலையே… அவர் வரலையேன்னு… கேக்க கூடாது.  கர்நாடக மக்கள்,  அந்த கலைஞர்கள்,  அரசியலோடு பின்னி பிணைஞ்சிருக்காங்க. தமிழக கலைஞர்கள் அந்த அரசியல்ல பின்னி பிணைய வில்லை அப்படிங்குறது ஒன்னு என தெரிவித்தார்.