திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பிரபல பேச்சாளரும், முக்கிய பொறுப்பில் இருப்பவருமான தமிழன் பிரசன்னா, நான் இரண்டு விஷயங்களை சொல்லி இன்றைய அரசியலை தொட்டு விடைபெற ஆசைப்படுகிறேன். கலைஞரை ரோகினி அவர்கள் பேசுகிறபொழுது சொன்னார்…  எங்களிடத்தில் இருந்து தான் உங்களுக்கு வந்தார் என்று சொன்னார்.

கலைஞர் is a multidimensional face. அவர் முதன் முதலில் தூக்கிப்பிடித்த கொடி இந்தி எதிர்ப்பு கொடி தான். ஒரு கையிலே தமிழ் கொடி, மற்றொரு கையிலே தாருல் இஸ்லாம் கொடியை தூக்கிப்பிடித்து விட்டு,  அங்கிருந்து  அண்ணாவால் ஈரோடுக்கு அழைக்கப்பட்டு பிறகு,  திரைத்துறைக்கு வந்தார். ஆக அரசியலுக்கு தான் முதலில் வந்தார் என்பது என்னுடைய வாதம்.

அவர் தாங்கிப்பிடித்த கொடி தமிழ் கொடி. அந்த தமிழ் கொடி திரைத்துறையில் போனதற்கு பிறகும் கூட, ஐயர் வாரார், செட்டியார் வரார், சார் வரார், அவா வரார்,   இவா வரார் என்று சொல்லுகிறபோது…  ஒரே ஒரு ஆள் தெருவில் படுத்துக்கிடக்கிறான். அப்போது போலீஸ்காரர்  லத்தியை வைத்து எழுப்புகிறார். என்னடா நீ பிட் பாக்கெட்டா ? என்று கேட்டபோது, 

எழுந்து நின்று பாக்கெட் இரண்டையும் காட்டிவிட்டு,  நான் எம்ட்டி பாக்கெட் ஐயா என்று குணசேகரன் சொன்ன அந்த வரியில்,  அடுத்த வசனம் தான்...என்னடா திரு திருனு முழிக்கிற ? அப்படிங்குறப்ப… தூங்குனவன எழுப்புனா திருதிருனு முழிக்காம வேற என்னையா பண்ணுவான்னு காவல் அதிகாரியை பார்த்து கேட்ட அந்த வார்த்தை மட்டுமல்ல, ”மந்திரி குமாரி”யில் கலைஞர் ஒரு வசனம் எழுதி இருப்பார். 

அந்த வசனம் என்பது அரசியலை கடந்து எம்.ஜி.ஆர் வாய்முணுத்து இருக்கலாம். ஆனால் அந்த வசனத்தினுடைய ஆழம் இருக்கிறதே… சாதாரண ஏழை – எளிய மக்கள் கேள்வி குறிகளாக இருக்கிறார்கள்.. இதோ கூறுகிப்போயிருக்கிறார்கள். அந்த கேள்விக்குறி ஒரு பக்கம் நிமிர்ந்து நின்றாள்,  அது ஆச்சரியக்குறி. ஆச்சரியகுறிகளை விட, கேள்விக்குறிகளுக்கு தான் அதிக வலிமை உண்டு. நாங்கள் ஆச்சரிய குறியாகவும் இருக்க தெரிந்தவர்கள்,  கேள்விக்குறியாகவும் மாற தெரியும். பண்ணையார்களுக்கு இந்த நாடு அல்ல,  எங்களைப்போன்ற சாமானிய மக்களுக்கு என்று பதிவு செய்கிறார் என பேசினார்.