சிவப்பாக மாறிவிடலாம் என்ற விளம்பரத்தை பார்த்து 40 ஆண்டுகளாக Fair and lovely-யை பயன்படுத்தியும் இன்னும் சிவப்பாக முடியவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இன்று நடைபெற்ற விழாவில் பேசிய அவர், நான் எங்கு வெளியே சென்றாலும் பேனா, பென்சில் எடுத்துச் செல்லாவிட்டாலும் கூட fair and lovely-யை மறக்காமல் உடன் எடுத்து சென்று விடுவேன். எனவே இந்த வாழ்க்கை திருப்தி இல்லாதது. வாழ்வில் போதும் என்று சொல்ல வேண்டும் என்றால் அது ஒரே ஒரு விஷயத்தில் மட்டும்தான். வயிறார சாப்பிட்டுவிட்டு திருப்தி என்று சொல்லுவோம் என்றார்.