நம் நாட்டில் கிட்டத்தட்ட 16 கோடி ஏழை – எளிய மக்கள் 100 நாள் வேலைத்திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். அந்த பதினாறு கோடி ஏழை –  எளிய மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை கொடுக்க வேண்டும் என்றால் ? ஒரு ஆண்டிற்கு 2  லட்சத்தி 70 ஆயிரம் கோடி நிதியை ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டும். அவ்வாறு அந்த நிதியை ஒதுக்காமல்,  ஆண்டுகாண்டு அந்த நிதியை குறைத்து வருகிறது ஒன்றிய அரசு.

அந்த நிதி குறைப்பால் ஏழை – எளிய மக்கள், குறிப்பாக  கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழைப் பெண்கள்,  பட்டியலின பழங்குடியின மக்கள் , பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆதலால் அதை தவிர்க்கும் விதமாக 100 நாள் வேலைத்திட்டத்திற்கு போதிய நிதியை ஒன்றிய பாஜக அரசு வழங்க வேண்டும் என்பதற்காக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தமிழ்நாட்டை பாதிக்கும் காவிரி விஷயம் மட்டுமல்ல.  இந்த நாட்டினுடைய ஏழை மக்கள் பாதிக்கப்படும் இந்த 100 நாள் வேலை திட்டத்திற்காகவும் இன்று இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என தெரிவித்தார்.