அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  X தளத்தில் அக்கட்சியினரோடு கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர்,  சினிமா துறையில் நடக்கக்கூடிய இந்த அதிகார துஷ்பிரயோகம் என்பது ஒரு எடுத்துக்காட்டு தான். தமிழகத்தில் எந்த துறை எடுத்துக் கொண்டாலும் இந்த விடியா திமுக ஆட்சியில் ஒரு குடும்பம் மட்டுமே வாழக்கூடிய நிலைதான் இன்றைக்கும்  இருக்கிறது. ரோம் நாடு பற்றி எரிந்த போது,  நீரே என்ற மன்னன் பிடில் வாசிப்பதை நாம்  கதையில் தான் கேட்டிருக்கின்றோம்.

ஆனால் இன்றைய முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள்,  தமிழகமே பற்றி எரியும்போது போட்டோ சூட் எடுத்துக்கொண்டு…  அந்த கதையை நமக்கு நிஜத்தில் காட்டிக் கொண்டிருக்கின்றார். இன்றைக்கு தமிழகத்தில் எங்கு திரும்பினாலும் போராட்டங்கள், தமிழகத்தில் கொலை, கொள்ளை, போதை பொருள் விற்பனை, பாலியல் வன்கொடுமை என சட்ட ஒழுங்கு சீர்கேடுகள் தினந்தோறும் நடந்து கொண்டு வருகிறது.

அதோடு இந்த ஆட்சிப் பொறுப்பு ஏற்ற இரண்டரை ஆண்டு காலத்தில் சொத்து வரி உயர்வு, வீட்டு வரி உயர்வு, மின் கட்டண உயர்வு என நாள்தோறும் பிரச்சனையாக இருந்து கொண்டிருக்கிறது. பொழுதொரு ஆர்ப்பாட்டமாக நடந்து கொண்டிருக்கிறது. தன் சொந்த மாநிலத்தை இந்த லட்சணத்திற்கு ஆளாக்கி விட்டு….

இந்தியா கூட்டணி அமைத்து நாட்டையே காப்பாற்ற போகிறேன் என்று கிளம்பி இருக்கின்றார் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்…. அண்ணா திமுக தலைமையிலான கூட்டணிக்கு யார் பிரதமர் என்று கூட்டணி என்று கேட்கும் திரு ஸ்டாலின் அவர்கள், இந்திய கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று தைரியமாக சொல்ல முன் வருவாரா ?  என கேள்வி எழுப்பினார்.