தெலுங்கானா மாநிலத்திலேயே காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றதால் அதில் கலந்து கொள்ள மல்லிகார்ஜுன கார்க்கே  சென்றிருந்தார். அதன் பிறகு டெல்லி  திரும்பவும் அவரது அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு எதிர்க்கட்சிகளின் ”இந்தியா” கூட்டணி  தலைவர்கள் ஆலோசனையை நடைபெற்றது. அந்த ஆலோசனையின் இறுதியிலே மக்களவை மற்றும் மாநிலங்களவையின் அலுவல்களில் பங்கு பெறுவது எனவும்,  மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

அரசு தரப்பு ஒவ்வொரு பக்கம் 75 வருட நாடாளுமன்ற வரலாறு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறது. அதேபோல பழைய நாடாளுமன்றத்தில் இருந்து புதிய நாடாளுமன்ற வளாகத்திற்கு இடமாற்றம் உள்ளிட்ட விஷயங்களை வலியுறுத்திருக்கிறது. அந்த சமயத்தில் எதிர்க்கட்சிகளும் விவாதத்தில் பங்கேற்று பேசுவார்கள்  . அப்படி பேசும்பொழுது விலைவாசி உயர்வு,  வேலையில்லா திண்டாட்டம்,  அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை, காஷ்மீர் தீவிரவாதத்தில் உயிர்கள் பலியானது போன்ற பல்வேறு விஷயங்களை அவர்கள் பேச இருக்கிறார்கள்.