திருவண்ணாமலை உலக புகழ் பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. திருக்கார்த்திகை தீப திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதனை பார்ப்பதற்கு உள்ளூர் மட்டுமின்றி வெள்ளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள். தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கொடியேற்றத்துடன் திருவிழா சிறப்பாக தொடங்கியது.

நேற்று அதிகாலை 3:40 மணிக்கு கோவில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதனையடுத்து மாலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகள் தீப தரிசனம் மண்டபம் எழுந்தருள அர்த்தநாரீஸ்வரர் காட்சியும் கோவில் பின்புறம் இருக்கும் அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்தினரும், கோவில் நிர்வாகத்தினரும் சிறப்பாக செய்து வருகின்றனர்.