புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 59 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில்,  மொத்தம் 229 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இதுவரை 202 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த செப்டம்பர் மாதம் தொடக்கம் முதலே காய்ச்சல் எண்ணிக்கை இந்த மாவட்டத்தில் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. சராசரியாக 20,  30 என்று வந்த பாதிப்பு தற்போது ஒரு நாளைக்கு 50,  60 என படிப்படியாக உள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 59 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று டெங்கு பாதிப்பு கண்டறியப்படாத நிலையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.  வடகிழக்கு தொடங்கி 30 நாட்களுக்கு மேல் ஆகி உள்ள நிலையில் காய்ச்சல் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அதே வேளையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தவிர பிற அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர் இல்லாத சுழல் ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி, ஆலங்குடி, கரம்பக்குடி, இலுப்பூர், அன்னவாசல் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் இல்லாததால், தனியார் மருத்துவமனையை நாடி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டெங்கு வார்டு தனியாக  தொடங்கப்பட்டுள்ளது.

காய்ச்சலுக்கான சிறப்பு வார்டும் தொடங்கப்பட்டுள்ளது. அப்படி தொடங்கப்பட்ட போதிலும் நோயாளியின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால்  சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்து மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கும் செவிலியர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

இந்த எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியிருக்கும் சூழ்நிலையில் காய்ச்சல் தடுப்பு  முகாம்கள் கூடுதலாக அமைக்க வேண்டும். கடந்த காலங்களில் வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் அதிகமாக நடத்துவார்கள்.  அதே போல காய்ச்சல் தடுப்புமுகாம் நடத்த வேண்டும் என மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது.