திப்பு சுல்தான் பேரவை சார்பில் நடத்த நிகழ்ச்சியில் கலந்து  கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், பண்ரூட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், ஓட்டுக்காகவோ, தேர்தல் அரசியல்காகவோ, நான் பேசுபவன் அல்ல. போராடுபவன் அல்ல. உங்கள் மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளாத, அல்லது இவர்கள் சொல்லுகின்ற நான் பச்சை தமிழன். என் மண்ணில் பிறந்த வாடிய பயிரை கண்டபோதெல்லாம்-னு சொன்ன, வள்ளலார் உரித்தெரித்த அந்த சுத்த சன்மார்க்க நெறிகளை ஏற்றுக்கொண்ட  மண்ணில் பிறந்தவன். நான் வேண்டுமானால் இந்த இந்திய அரசாங்கத்தின் கஜெட்டில் வேல்முருகன், இந்துவாக இருக்கலாம்.

வேல்முருகன் ஆக இருக்கலாம். ஆனால், நான் தமிழன். என் தாய்மொழி, தமிழ். நான் இந்த இனத்தின் பூர்வீக குடி. இங்கே உட்கார்ந்து இருக்கிற, என் ஆயிரம், ஆயிரம், மார்க்கதால் இஸ்லாமிய தளிவு கொண்டவர்கள், என் ரத்த உறவுகள், என் சொந்த உறவுகள், என்னுடைய உறவுகள். இவர்களைப் பிரித்து பகுத்தாய்வு செய்து, அந்நியப்படுத்துகிற முயற்சியில், இந்த சங்கி கும்பல்கள் ஈடுபட்டால், அந்த சங்கி கும்பல்களுக்கு சரியான சவுக்கடி கொடுப்பதற்காகத்தான், தமிழ்நாடு முழுவதும் அரசின் தடைகளை உடைத்தெறிந்தேன்.

40க்கும் மேற்பட்ட வழக்குகளை சி.பி.ஆர்., என்.ஆர்.சி., போன்ற மிக மோசமான, சிஏ சட்டங்களை இந்த மண்ணில் கொண்டு வந்த போது, இஸ்லாமியத்தை ஏற்றுக் கொள்ளாத, வேல்முருகன் ஆகிய நான்… நீங்க சொல்லுகிற, இந்து சமூகத்தில் பிறந்தவன் என்று சொல்லக்கூடிய…. அதுவே, தமிழ் கடவுள் முருகன் பெயரை வைத்திருக்கிற, நான்….சங்கிகளின் முகத்திரையை கிழிப்பதற்காக… அத்துனை தடைகளையும் தாண்டி தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் இந்த போராட்டம் நடந்த இடத்தில் சென்று பேசினேன் என் பேசினார்.