சென்னை மாவட்டத்தில் உள்ள போரூர் பகுதியில் ஷியாம் சுந்தர்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துரைப்பாக்கம்- பல்லாவரம் ரேடியல் சாலையில் இருக்கும் சாப்ட்வேர் கம்பெனியில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு ஷியாம் சுந்தர் நிறுவனத்தின் 7-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்த சக ஊழியர்கள் அவரை மீட்டு பள்ளிக்கரணையில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த துரைப்பாக்கம் போலீசார் ஷியாம் சுந்தர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.