அமெரிக்காவைச் சேர்ந்த சமூக வலைதள பிரபலமான மைக் ஹோல்ஸ்டன், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்டவர்.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்ற அவர், குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள லாக் ஹார்ட் ஆற்றில் முதலையை பாய்ந்து பிடித்து மல்யுத்தம் செய்வது போன்று வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
ஆற்றில் உள்ள ஒரு முதலையின் கழுத்தை இறுகப் பிடித்து, அதனை கட்டுப்படுத்தி பின்னர் விடுவித்த அவர் எடுத்த வீடியோ வைரலானது. ஆனால், இந்தச் செயல் அவருக்கு பெரும் பிரச்சினையாக மாறியது.
View this post on Instagram
ஹோல்ஸ்டனின் இந்தச் செயலுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வன உயிரினங்களை துன்புறுத்துவதாகக் கருதப்பட்ட இந்தச் சம்பவத்திற்கு எதிராக, அவரைக் கைது செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, ஆஸ்திரேலிய காவல்துறையினர் மைக் ஹோல்ஸ்டனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம், வன உயிரினங்களைப் பாதுகாப்பது குறித்து மீண்டும் விவாதங்களை எழுப்பியுள்ளது.
