மத்திய ஆப்பிரிக்கா: காட்டில் இரை மற்றும் வேட்டைக்காரன் இடையிலான பாய்ச்சல் எப்போதும் பரபரப்பானதும்தான். ஆனால் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள ஒரு வீடியோ, அந்த சூழ்நிலையை அதிர்ச்சியாக மாற்றியுள்ளது. இந்த வீடியோவில், ஒரு மத்திய ஆப்பிரிக்க பாறை மலைப்பாம்பு (Central African Rock Python) தனது இரையான ஒரு பெண் மானை முழுவதுமாக விழுங்கும் காட்சியை காணலாம்.
The Central African rock python after killing and swallow an adult female impala pic.twitter.com/vQHkc5gpUz
— Damn Nature You Scary (@AmazingSights) September 11, 2025
அந்த வீடியோவில், மலைப்பாம்பின் வயிறு வீங்கியதைக் காணலாம். அதனால், அது அசைய கூட முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறது. ஆனால் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் – அந்த பெரிய மானை, அதன் சிறிய வாயிலாக எப்படி விழுங்கியது என்பதுதான்! மலைப்பாம்புகள் விஷமில்லாதவை என்பதாலும், கடிப்பால் தாக்குவதில்லை என்பதாலும், அவை அதிக ஆபத்தில்லாதவை என பொதுவாக கருதப்படுகின்றன. ஆனால் உண்மையில், அவை தங்கள் இரையை விழுங்கிய பின் முழுவதுமாக விழுங்கும் திறனைக் கொண்டவை. இது தற்போது வீடியோவால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும் இக்காட்சியை @AmazingSights என்ற ட்விட்டர் கணக்கு பகிர்ந்துள்ளது. “மத்திய ஆப்பிரிக்க பாறை மலைப்பாம்பு, ஒரு வயது மானை விழுங்குகிறது”என்ற தலைப்புடன் பகிரப்பட்ட இந்த காணொளி, மிக குறைந்த நேரத்தில் 36 ஆயிரம் பார்வைகளை எட்டியுள்ளது. நூற்றுக்கணக்கான பயனர்கள் அதனை விருப்பமாகக் கிளிக் செய்து, பலரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்த கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.
