திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தனிமணியன் குடியிருப்பு கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சிவா என்ற மகனும், சிவானி என்ற மகளும் இருந்துள்ளனர். கடந்த மாதம் 24-ஆம் தேதி சிவானிக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அருகே இருக்கும் கிளினிக்கிற்கு சென்று ஊசி போட்டுள்ளனர். அதன் பிறகு சிறுமியின் உடல்நலம் தேறியது.

இதனையடுத்து கடந்த 29-ஆம் தேதி மீண்டும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமி பாளை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிவானி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.