கேரளாவின் பிரபலமான சுற்றுலாத் தலமான மூணாறில் உள்ள ஓர் ஆகாய ஊஞ்சலில், இயந்திரக் கோளாறு காரணமாக 8 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 120 அடி உயரத்திற்குச் சென்ற அந்த ஆகாய ஊஞ்சல் அல்லது ஓட்டல் திடீரென இயந்திரப் பழுது காரணமாகக் கீழே இறங்க முடியாமல் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கோளாறு காரணமாக அந்தச் சுற்றுலாப் பயணிகள் 2 மணி நேரத்திற்கும் மேலாக அந்தரத்தில் தவித்து வந்துள்ளனர்.
#WATCH | Munnar, Kerala | Tourists were stranded at a private sky dining setup in Anachal, Idukki, after a technical failure in the crane, today; Rescue operation underway
The incident occurred near Munnar, leaving tourists and staff stranded for over 1.5 hours. Rescue efforts… pic.twitter.com/Pciz0CoLxB
— ANI (@ANI) November 28, 2025
இயந்திரக் கோளாறு காரணமாக ஆகாய ஊஞ்சலில் சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகளைக் கீழே இறக்க முடியாமல் மீட்புக் குழுவினர் திணறி வந்துள்ளனர். இதனையடுத்து, அங்குள்ள உள்ளூர் நிர்வாகம் மற்றும் தீயணைப்புத் துறை இணைந்து, அந்த 8 சுற்றுலாப் பயணிகளையும் மீட்கும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. நீண்ட நேரமாக அந்தரத்தில் சிக்கியிருந்த பயணிகளைக் காயங்கள் இல்லாமல் பத்திரமாக மீட்கும் முயற்சியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் மூணாறு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது
