லண்டன் மாநகரில் மக்கள் யாரும் வேலைக்குச் செல்லக் கூடாது என்று விசித்திரமான முறையில் முடிவு செய்த பொறியாளர் ஒருவர், அங்குள்ள ஒரு பொதுப் பேருந்தின் நுழைவாயிலைத் தடுத்து முடங்கிய சம்பவம் சோசியல் மீடியாவில் வெளியாகி நெட்டிசன்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தங்களது ஓய்வூதியங்களை முறையாகச் செலுத்த வேண்டும் என்ற வாக்குறுதியை வலியுறுத்தி இந்த நூதனப் போராட்டம் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இதனால் கடுமையாக விரக்தியடைந்த லண்டன்வாசி ஒருவர், பேருந்தை உடனே இயக்குவதற்காக அந்தப் பொறியாளரை தரதரவென இழுத்து அடித்து வெளியே தள்ளுகிறார்.

 

“>

வேலைக்குச் செல்ல அவசரமாகப் பேருந்தில் காத்திருந்த பயணிகளின் பொறுமையைச் சோதிக்கும் வகையில் அரங்கேறிய இந்த மோதல் காட்சி, தற்போது எக்ஸ் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் சர்வதேச அளவில் நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.