தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் நகரின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.