மக்கள் மத்தியில் மிகவும் பிரபல பைக்குகளில் ஒன்றாக Hero Splender Plus பைக் இருக்கிறது. டெல்லியில் இந்த பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலையானது ரூபாய்.78,251 ஆகும். இது மணிக்கு 70 கி.மீ மைலேஜ் தரக்கூடியது. மேலும் பைக் ஏர் கூல்டு, 4 ஸ்ட்ரோக், சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வாயிலாக இயக்கப்படுகிறது. அத்துடன் பைக்கில் 97.2 சிசி இன்ஜின் இருக்கிறது. இதன்  எரிப்பொருள் டாங்க் திறனானது 9.8 லிட்டர்.

டெல்லியில் Bajaj Platina 100 பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலையானது ரூ.65,856 ஆகும். இது மணிக்கு 70 கி.மீ மைலேஜ் தரக்கூடியது. இந்த பைக்கில் 4 ஸ்ட்ரோக், சிங்கிள் சிலிண்டர் 102 சிசி இன்ஜின் உள்ள நிலையில், 4 கியர்பாக்ஸ்கள் இருக்கிறது. இது தவிர்த்து பைக்கில் 11 லிட்டர் எரிப்பொருள் டேங்க் இருக்கிறது.

இதையடுத்து TVS Raider பைக்கில் 124.8 சிசி இன்ஜின் இருக்கிறது. டெல்லியில் இதன் எக்ஸ் ஷோரூம் விலையானது  ரூ.86,803 ஆகும். இது மணிக்கு 67 கி.மீ மைலேஜ் தரும். இப்பைக்கில் ஏர் மற்றும் ஆயில் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் கொடுக்கப்பட்டு உள்ளது. பைக்கில் 5 கியர்பாக்ஸ்கள் இருக்கின்றன. இந்த பைக்கில் 10 லிட்டர் எரிப்பொருள் டேங்க் இருக்கிறது.

டெல்லியில் TVS Sport பைக்கின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையானது ரூ.64,050 ஆகும். இந்த பைக்கில் சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்ட்ரோக், ப்யூவல் இன்ஜெக்ஷன் மற்றும் ஏர் கூல்டு 109.7 சிசி இன்ஜின் இருக்கிறது. இது மணிக்கு 69 கி.மீ மைலேஜ் தரும். இந்த பைக்கில் 10 லிட்டர் எரிபொருள் டேங்க் இருக்கிறது.

அதன்பின் சிறந்த மைலேஜ் விஷயத்தில் Honda SP 125 பைக் மிகவும் பிரபலமாகியது. மணிக்கு 65 கி.மீ மைலேஜ் தரக்கூடிய இது, டெல்லியில் ஆரம்ப எக்ஸ் ஷோரூம் விலையானது ரூ.85,131 ஆகும். அதோடு பைக்கில் 123.94 சிசி, 4 ஸ்ட்ரோக் எஸ்ஐ இன்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. பைக்கில் 5 கியர்பாக்ஸ்கள் இருக்கின்றன. இந்த பைக்கில் 11.2 லிட்டர் எரிப்பொருள் டேங்க் இருக்கிறது.