2023 ஷாங்காய் மோட்டார் நிகழ்வில் ஹோண்டா நிறுவனமானது 2 எலெக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த மாடல்கள் “e:N” சீரிசின் கீழ் விற்பனை செய்யப்படயிருக்கிறது. இது ஹோண்டா நிறுவனம் சீன சந்தையில் அறிமுகம் செய்யவுள்ள தலைச்சிறந்த பத்து எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாகும். புது எலெக்ட்ரிக் வாகனங்கள் “e:NS1” மற்றும் “e:NP1” சீரிசை தொடர்ந்து அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த மாடல்கள் டாங்பெங் ஹோண்டா மற்றும் GAC ஹோண்டா கூட்டணியில் 2021 அக்டோபர் வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

இப்போது டீசரில் காணப்படும் இரண்டு எலெக்ட்ரிக் கார் மாடல்களும் கிராஸ்ஒவர் எஸ்யுவி போல் காட்சியளிக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமல்லாமல் ஹைப்ரிட் எலெக்ட்ரிக் மற்றும் பிளக் இன் ஹைப்ரிட் எலெக்ட்ரிக் மாடல்களும் ஷாங்காய் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்படுமென ஹோண்டா அறிவித்திருக்கிறது. புது எலெக்ட்ரிக் மாடல்கள் சீன சந்தையில் முதல்கட்டமாக அறிமுகம் செய்யப்படுகிறது. இதேபோல மாடல்கள் உலகின் மற்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. மேலும் ஹோண்டா நிறுவனம் தன் அடுத்த தலைமுறை “கனெக்ட் 4.0” கனெக்டெட் கார் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய உள்ளது.