இந்தியாவில் கவாசகி நிறுவனம் ரெட்ரோ பைக்காக W175 பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 மற்றும் டிவிஎஸ் ரோனூன் ஆகியோ பைக்களுக்கு போட்டியாக அறிமுகம் ஆகிறது. இந்த புதிய மாடல் பைக்குக்கு அறிமுக சலுகையாக 10,000 ரூபாய் தள்ளுபடி அறிவித்துள்ளது.

இந்த தள்ளுபடி ஏப்ரல் 30-ஆம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இந்த பைக் 2 வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் ஸ்டாண்ட் வெர்ஷன் ரூ. 1.47 லட்ச ரூபாய்க்கும், எடிசன் மாடல் ரூ. 1.49 லட்ச ரூபாய்க்கும் கிடைக்கிறது.