இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய பைக்குகளில் ஒன்றுதான் ஹோண்டா ஷைன் 100. சென்ற மார்ச் 15-ம் தேதி இந்திய சந்தையில் இந்த பைக் முறைப்படி விற்பனைக்கு அறிமுகமானது. இது சிறப்பான மைலேஜ் வழங்கக்கூடிய விலை கம்மியான பைக் ஆகும். ஹோண்டா ஷைன் 100 பைக்கின் உற்பத்தி பணிகள் இப்போது மும்முரமாக நடந்து வருகிறது.

கர்நாடக நர்சபுரா பகுதியில் ஹோண்டா டூவீலர் நிறுவனத்தின் தொழிற்சாலை அமைந்திருக்கிறது. அங்கு தான் ஹோண்டா ஷைன் 100 பைக்கின் உற்பத்தி பணிகளானது மேற்கொள்ளப்படுகிறது. இந்த பைக்கை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யக்கூடிய பணிகள் மே 15-ம் தேதியில் இருந்து தொடங்கப்பட்டுள்ளது. ஹோண்டா ஷைன் 100 பைக்கை டீலர் ஷிப்களுக்கு அனுப்பிவைக்கும் பணிகளும் இப்போது தொடங்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் புத்தம் புது 98.98 சிசி பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் பைக்குக்கும், ஹோண்டா ஷைன் 100 விற்பனையில் கடுமையான போட்டியை வழங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இந்த மாடல் பைக்க்கு வெறும் ரூ.64,900 மட்டுமே விலையாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. எனவே இந்த விலை கம்மியான பைக்கை வாங்குவதற்காக வாடிக்கையாளர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.