
இன்று காலை 10:30 மணிக்கு முதலமைச்சர் மணியளவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தன்னுடைய கோர்ட் ஹாலுக்கு வந்த பிறகு உடனடியாக குற்றம் சாட்டப்பட்ட நபர்களான பொன்முடி மற்றும் அவரது மனைவியிடம் தங்களது இறுதியான கருத்துக்களை முன்வைக்குமாறு நீதிபதி தெரிவித்திருந்தார். அந்த அடிப்படையில் மருத்துவ காரணங்கள், வயதின் அடிப்படையை கொண்டு வழங்க வேண்டிய தண்டனையை குறைத்துக் கொடுக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை பொன்முடி மற்றும் அவரது மனைவியின் சார்பில் முன் வைக்கப்பட்டது.
அவருடைய வழக்கறிஞர் என்ஆர் இளங்கோவும் இதே விஷயங்களை முன் வைத்து பொன்முடிக்கு வயது 72 ஆகவும், அவரது மனைவிக்கு வயது 60 எனக் குறிப்பிட்டு அவரது மருத்துவ அறிக்கையை இரண்டு பேரும் தனித்தனியாக நீதிபதி முன்பு தாக்கல் செய்தார்கள். அதன் பிறகு தண்டனை விவரங்கள் என்பது வாசிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் பொன்முடிக்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.
மூன்று ஆண்டு சிறை தண்டனையும், 50 லட்சம் அபராதமும் அதேபோல் அவரது மனைவிக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபதாரமும் விதிக்கப்பட்டது.காலை 10.40க்கு இந்த வழக்கு தொடங்கப்பட்டது. இருவருமே கைகூப்பி தங்களது தண்டனையை குறைத்துக் கொடுக்கணும் அப்படிங்கறத தெரிவித்ததாக சொல்லப்படுகின்றது. தண்டனை கொடுக்கப்பட்டாலும் தற்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இந்த வழக்கை சந்தித்துக் கொள்ளலாம் என்ற ஒரு உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்ல ஒருவேளை அந்த வழக்கு விசாரணை என்பது முடியாத பட்சத்தில் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி, இது தொடர்பான விஷயங்களை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம். இருவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு கொடுக்கப்பட்டிருந்தாலும் கூட, தண்டனை விவரங்கள் என்பது இன்று அறிவிக்கப்பட்டது. மூன்று ஆண்டு சிறை தண்டனை மற்றும் 50 லட்சம் ரூபாய் அபதாரம் ஒருவேளை ஐம்பது லட்சம் அவதாரத்தை செலுத்த தவறினால் மேலும் ஆறு மாத சிறைத் தண்டனை என்பது கொடுக்கப்படும் என்பது தீர்ப்பு விவரத்தில் நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.
தற்போது நிலையில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட காரணத்தால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் அவர் தற்போது அமைச்சராக இருக்கிறார். சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். தற்போது அமைச்சர் பதவி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை பொன்முடி இழந்திருக்கிறார். தண்டனை விவரங்கள் தீர்ப்புகள் உடைய நகல்கள் சட்டமன்ற செயலகத்தில் சமர்ப்பித்த பிறகு இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி என்பது காலியாக இருப்பதற்கான நடவடிக்கை என்பது அடுத்த அறிவிக்கப்படும். அமைச்சர் பதவியை பொறுத்தவரை இன்று மதியத்துக்குள்ளோ, மாலைக்குள்ளோ அதிகாரப்பூர்வமாக ஆளுநர் மாளிகையில் இருந்து ஒரு செய்து குறிப்பு என்பது வெளியாகும். பொன்முடி உயர் கல்வித்துறை அமைச்சராக இருக்கிறார்.
அவருக்கு தற்போது இந்த வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டுள்ளார். அதன் அடிப்படையில் அமைச்சர் பதவி என்பது பறிக்கப்பட்டிருக்கிறது என்ற அதிகாரப்பூர்வமான செய்தி குறிப்பு ஆளுநர் வெளியிட வேண்டும் என்றுஎதிர்பார்க்கப்படுகின்றது.