செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் முதல்வரும் , எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி,  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பெங்களூருக்கு செல்கிறார். இங்கே கடுமையான குடிநீர் பிரச்சனை இருக்குது. டெல்டா பாசன விவசாயிகளுக்கு தேவையான நீர் கிடைக்கல. நமக்கு மாதம் தோறும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி  நதியில் இருந்து குறிப்பிட டிஎம்சி திறந்துவிடனும். இரண்டு மூன்று மாதம்  திறந்து விடல.

நான் ஏற்கனவே பேட்டி கொடுத்துட்டேன், பத்திரிக்கை செய்தி வெளியிட்டேன்.  அறிக்கையை வெளியிட்டேன். முதலமைச்சர் என்ன சொல்லி இருக்கணும் ? தமிழ்நாட்டு விவசாயிகளுடைய பிரச்சனையை தீர்க்க குடிநீர் ஆதாரமாக இருக்கக்கூடிய காவிரி நதிநீர் தேவையான  நீரை பெறுவதற்கு…  தமிழ்நாட்டினுடைய உரிமை பெறுவதற்கு…

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த கோரிக்கை வைத்திருக்க வேண்டும். நான் இந்த பெங்களூரு கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றால் ?  கெஜ்ரிவால் போல… உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி,  எங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கு நீரை மாதம் தோறும் காவிரியில் தண்ணீர் திறந்து விட்டால் தான் இந்த கூட்டத்திலே நான் இடம் பெறுவேன் என்று ஒரே ஒரு அறிவிப்பு கொடுத்திருந்தால் போதும்,  அழகா தண்ணி வந்து சேர்ந்திருக்கும்.

இத்தனை நடைமுறைக்கு சிக்கலே இருந்திருக்காது. இவர் போயி பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார். மத்திய நீர்பாசனதுறை அமைச்சரை பார்த்து கடிதம் கொடுக்கின்றார். ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்துவிட்டது. கூட்டணி கட்சி காங்கிரஸ். திமுகவும் கூட்டணியில் கட்சி அங்கம் வகித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஸ்டாலின் பெங்களூர் போகிறார். அங்கு இருக்கிற நீர் பாசன துறை அமைச்சர் தான் ஸ்டாலினுக்கு பூங்கோத்து கொடுத்து, சால்வை போட்டு வரவேற்பு கூட்டிட்டு போறாரு.  இதை எல்லா தொலைக்காட்சியிலும் காட்டினீர்கள். பத்திரிக்கையில் போட்டோ எல்லாம் வந்து இருக்கு.

ஏன் ரெண்டு வார்த்தை பேச முடியாதா ? ஓட்டு போட்ட மக்கள்… நம்முடைய விவசாயிகள்..  இரவென்றும் , பகல் என்றும் பாராமல் ரத்தத்தை வியர்வையாக மண்ணிலே சிந்தி உழைத்த  அவர்கள்…  அந்த டெல்டா பாசன விவசாயிகள் அங்கே நெல் பயிரை பயிரிட்டு இருக்கிறார்கள். அது கருகி  கொண்டிருக்கிறது. இந்த தருணத்தில் ஒரு அஞ்சு நிமிஷம் எனக்கு  நேரம் கொடுங்க. எங்களுடைய விவசாயிகள் பிரச்சனையை  சொல்றேன்னு செய்தி வந்திருந்தால் கூட பரவால்ல…. ஒண்ணுமே வரலையே. இப்படிப்பட்ட முதலமைச்சர் தான் இந்த நாட்டை ஆண்டு  கொண்டு இருக்கின்றார். மக்களை பற்றி கவலை இல்லை, நாட்டை பற்றியும் கவலையில்லை,  விவசாயிகளை பற்றியும்  கவலை இல்லை.

திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ…  அப்போதெல்லாம் ஜாதிப் பிரச்சனை, இப்படிப்பட்ட பிரச்சனைகள் வந்து கொண்டு தான்.  இதுவரைக்கும் திமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழ்ந்த காலமே கிடையாது. ஜாதி சண்டை, மத சண்டை எல்லாமே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான் பார்க்க முடியும். அதுதான் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறாள். அதைதான் நாமளும் பார்த்துக் கொண்டிருக்கின்றோம் என தெரிவித்தார்.