செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மரியாதைக்குரிய கழக பொதுச் செயலாளர் வலிமையான கருத்துக்களை அறிக்கை மூலமாக ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கிறார்கள். பெற்றோர் எல்லோருமே செய்தி ஊடகங்களில் வந்த செய்திகளை எல்லோருமே பார்த்தோம். மனதிற்கு மிகுந்த வலியையும் – வேதனையையும் வருத்தத்தையும் தரக்கூடிய நிகழ்வு. சொல்லன்னா துயரத்தில் அந்த குடும்பமும் மட்டுமல்ல,  எங்களுக்கும் அந்த வலி இருக்கிறது.

காரணம் என்னவென்றால் ? நீட்டை எதிர்த்து,  ஓங்கி குரல் கொடுத்த தலைவர்…  இந்தியாவிலேயே புரட்சித்தலைவி அம்மா தான். வலிமையான குரலை ஓங்கி ஒலித்தார்.  அதேபோல அவருடைய வழியிலே நீட்டை எதிர்த்தவர்,  எதிர்த்து கொண்டிருப்பவர்,  இன்றைக்கும் நீட் வேண்டாம் என்று கொள்கை உறுதியோடு இருக்க கூடிய இயக்கம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பொதுச்செயலாளர் எடப்பாடியார். அதில் மாற்றுக் கருத்து இல்லை.

எங்களுடைய ஒரே கேள்வி ஒன்றுதான். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து என்று அறிவித்தது யார் ? சொன்னது யார் ? வாக்கு கேட்டது யார் ? மக்களிடத்திலே வாக்குறுதி கொடுத்தது யார் ? அது தானே பிஞ்சு மனதில் அந்த குழந்தைகளுக்கு இன்று வடுவாகி இருக்கின்றது.  ஏற்கனவே நீட்டால் ஏற்பட்ட பாதிப்பை வைத்து அரசியல் செய்தது யார் ?  இந்த கேள்விகளை  எல்லாம் நான் முன்வைக்க விரும்புகின்றேன்.

இதற்காகத்தான் யாருமே கேட்காத வகையில்….  யாருமே கோரிக்காத வைக்காத நிலையில்… சமூக நீதியை நிலை நிறுத்துகின்ற வகையில் 7.5% இட ஒதுக்கீடை கொடுத்து, இன்றைக்கு சாதாரண அரசு பள்ளிகளில் படிக்கக்கூடிய ஒரு விவசாயி, தொழிலாளி உடைய மாணவ – மாணவிகள் எல்லாம்  606 பேர் இன்றைக்கு மருத்துவர்கள்… உலகத்திலேயே இது மாதிரியான சாதனை கிடையாது. இதை உருவாக்கியவர் மரியாதைக்குரிய எடப்பாடியார் அவர்கள். அதுதான் சொல்றோம்…  இதையெல்லாம் பார்த்து மாணவ – மாணவிகள் அரசு பள்ளியில் இருக்கக்கூடிய மாணவ – மாணவிகள் இன்றைக்கு 606 பேர் MMCயிலும், ஸ்டாண்லி லையும்  படிக்கிறார்கள் இது வரலாற்று உண்மை என தெரிவித்தார்.