ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் முகாமில் இருந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காணாமல் போய் உள்ளார். நேற்று பி எஸ் எப் வீரர் சுகம் சவுத்ரி தனது பட்டாலியன் தலைமையகமான பந்த்சௌக்கில் இருந்து திடீரென காணாமல் போனவர். BSF உடனடியாக அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தியது.

ஆனால் அவர் குறித்த எந்த தடயமும் கிடைக்கவில்லை. அதன் பிறகு பந்த்சௌக் காவல் நிலையத்தில் அவரை காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினரும், எல்லை பாதுகாப்பு படையினரும் இணைந்து காணாமல் போன வீரரை தேடி வருகின்றனர்.