
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், நடிகை கவுதமி அவுங்க எதிலும் சோர்ந்து போகக்கூடிய ஆள் கிடையாது…. எல்லாத்தையும் தைரியமா எடுத்து பண்ணக்கூடியவங்க… ஒரு தன்னம்பிக்கை, தைரியம் கொண்ட பெண்மணி. கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஏதோ ஒரு வழக்கு தொடர்பாக கூட அவருடைய உதவியாளர் எனக்கு மெசேஜ் போட்டு இருந்தாங்க…. கட்சியில் இதுபோன்று உதவி வேண்டும்…
ஒரு கட்சியில ஒரு சிலரை பாதுகாக்குறாங்க அப்படின்னு… முழுமையான தகவல் எனக்கு எதுவும் தெரியல. முழுமையான தகவலை கொடுங்க நான் உதவி பண்றேன்னு சொல்லிட்டு தான் பதில் கொடுத்திருந்தேன். ஆனால் இன்னைக்கு அவங்களோட அறிக்கை வந்து ரொம்ப கஷ்டமா இருக்கு.. பார்த்தவுடனே… இதில் என்ன பார்க்கணும்னா ? அவங்க வழக்கு கொடுத்திருக்காங்க…
அதுல நிச்சயமா கட்சிக்காரங்க சட்டத்திற்கு புறம்பாக போய் யாரையும் பாதுகாக்க போறதில்லை… ரெண்டாவது அவுங்க மாநில தலைவர் கிட்டயோ… என்கிட்டயோ அந்த பிரச்சனை என்ன அப்படிங்கறதை ? முழுமையாக சொல்லியிருந்தால்… இன்னும் கூட எங்களுக்கு உதவி பண்றதுக்கு வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் அதுவும் நான் கேட்டேன்.
முழுசா சொல்லுங்க… எந்த சப்போர்ட்னாலும், நான் பண்றேன்னு சொல்லிட்டு தான் சொல்லி இருந்தேன்… ஆனால் ஒரு மாநில அரசு புகார் கொடுத்து இத்தனை நாள் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள் என்பது இந்த அரசு எப்படி எல்லாம் பண்ணுது… அவுங்க பிஜேபியில் இருந்த காரணத்தினால் நடவடிக்கை எடுக்காமல் இருக்காங்களா ?
ஏன் இத்தனை நாள் புகாரை பதிவு பண்ணல ? இன்னைக்கு அவங்க கட்சிக்கு ராஜினாமா கடிதம் கொடுத்த உடனே புகாரை பதிவு பண்றாங்கன்னா…. அப்போ இவங்க கட்சியை விட்டு வந்தா தான் புகார் பதிவு பண்ணுவேன் அப்படின்னு ஏதாவது நெருக்கடி கொடுத்து இருக்காகளா ? அப்படிங்கிறது தெரியல. அதனால் இந்த விஷயத்தைப் பொறுத்த வரைக்கும் அவர்களுடைய கடிதம் எனக்கும் ஒரு மகளிர் அணி தலைவராக மனவேதனை கொடுத்திருக்கு என தெரிவித்தார்.