செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் கொடுப்போம் சொன்னாங்க. இன்றைக்கு இந்தியாவில் ஏழு மாநிலத்தில பழைய ஓய்வூதியம் கொடுப்போம் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆனால் இங்கே அதை வைத்து தான் மிகபெரும் வெற்றியைப் பெற்றார்கள் திமுக அரசு…  ஜாக்டோ – ஜியோ  அரசு ஊழியர்களுக்கு எல்லாம் ஆதரவு கொடுத்தாங்க…. குடும்பம் குடும்பமா போய் திமுகவுக்கு வாக்களித்தார்கள்.

கிட்டத்தட்ட இன்னைக்கு மூன்று வருடமாக ஆக போகுது. ஆனாலும் அதைப்பற்றி மூச்சு பேச்சு கூட கிடையாது. இப்படி வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்ற வேண்டும். அது மட்டும் இல்லாமல் நம்மளுடைய மீனவர்கள் பிரச்சனை….  இலங்கையில் சமீப காலத்தில் பார்த்தீங்கன்னா….  இலங்கை அரசு ஆதரவு கொடுக்கின்ற கடல் கொள்ளையர்கள்…..  இலங்கை கடற்படைகள் மற்றும் இலங்கை அரசு ஆதரவு கொடுக்கின்ற கடல் கொள்ளையர்கள் நம்முடடைய மீனவர்களை தாக்கி கொள்ளையடித்து,  அந்த மீன் எல்லாம் பிடிங்கிட்டு போய்க் கொண்டிருக்கிறார்கள், இதுகண்டிக்கத்தக்கது.

தமிழக அரசு மட்டுமல்ல,  இந்திய அரசும்  நடவடிக்கை எடுக்க வேண்டும். போனவாரம்  ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டார்கள். நேத்து பாத்தீங்கன்னா…. நாகை  மீனவர் 14 பேர்.  அப்ப இந்தியா இலங்கைக்கு உதவி செய்து என்ன பயன் ? கிட்டத்தட்ட  15 ஆயிரம் கோடி ரூபாய் உதவி செய்து இருக்கிறார்கள். 2 பில்லியன் டாலர். அப்போ இந்த நிபந்தனைகள் எல்லாம் வைத்து, நம்ம  மீனவர்கள் நிம்மதியாக மீன் பிடிக்க வேண்டும். அந்த சூழல்கள் உருவாக  வேண்டும் என தெரிவித்தார்.