அதிமுகவின்  52 ஆம் ஆண்டு துவக்க விழா  பொதுக்கூட்டம் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, சங்கரன்கோவில் தொகுதியிலே… பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருக்கின்றோம். அதில் சிலவற்றை குறிப்பிடுகின்றேன். ஒன்றை கோடியில் எலுமிச்சை ஆராய்ச்சி நிலையம் துவங்கப்பட்டது.

2.70 கோடியில ஆட்டின் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது. 50 கோடி மதிப்பில் சங்கரன்கோவில் – ஆலங்குளம் குடிநீர் விரிவாக்க திட்டம் 37 கிராமத்துல கொடுத்தது அண்ணா திமுக. 43 கோடியில் சங்கரன்கோவில் நகராட்சியில் மறு சீரமைப்பு கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றப்பட்டது.

சங்கரன்கோவில் 155 கோடி மதிப்பில் ஊரக வளர்ச்சி துறை மூலமாக சாலை மற்றும் குடிநீர் மேம்பாட்டு பணிகள் நிறைவேற்றப்பட்டன. சங்கரன்கோவில் தொகுதியில 543 கோடி மதிப்பீட்டில்  கூட்டு குடிநீர் திட்டம்  நிறைவேற்றப்பட்டது.  சங்கரன்கோவில் தொகுதியில 250 கோடி மதிப்பீட்டில் திருநெல்வேலி –  ராஜபாளையம் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. தாட்கோ மூலமாக 49 திட்டங்களை நிறைவேற்றப்பட்டன. ரூபாய் 15 கோடியில் 4 அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டது.

17 நடமாடும் ரேஷன் கடைகள் துவங்கப்பட்டது.  16 அம்மா மினி கிளினிக்  தொடங்கப்பட்டது இந்த ஆட்சியில் மூடிட்டாங்க. சுவாமி சன்னதியில் தேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. அனைத்து கிராமங்களிலும் குமராமத்து  திட்டங்களை நிறைவேற்றினோம். அதேபோல தென்காசி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் 119 கோடியில் கட்டிக் கொடுத்திருக்கிறோம். கடையநல்லூர் பகுதியில் 40 ஆண்டு கால கோரிக்கை ஏற்று கடையநல்லூர் தாலுகா அறிவிக்கப்பட்டு..

அம்மாவின் அரசு தாலுகா அலுவலகம் கட்டிக் கொடுக்கப்பட்டது.  சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவர் அவர்களின் பிறந்த நாளில் அரசு விழாவாக அறிவிக்கப்பட்டது. தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு 48 படுகை கொண்ட பல்நோக்கு கட்டிடம் மற்றும் புற நோயாளிகள் பிரிவு ரூபாய் ஒன்பது கோடியில் அமைக்கப்பட்டது… ஆலங்குளத்தில் பெண்களுக்கான அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பத்தரை கோடியில் அமைக்கப்பட்டது.

கடையநல்லூரில் புதிய அரசியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 7 கோடியில் செயல்படுத்தப்பட்டது. கடையநல்லூர் தொகுதியில் அரசு தொழில் பயிற்சி நிலையம் துவங்கப்பட்டது. கடையநல்லூர் தொகுதியில் 300 கோடி மதிப்பீட்டில் 2018 முதல் 2021 வரை சாலை மறு சீரமைப்பு, பணிகள் சாலை,  விரிவாக்க பணிகள் நிறைவேற்றப்பட்டன. ரூபாய் மூன்று கோடி மதிப்பீட்டில் சுரண்டை நகராட்சி அனுமன் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. தென்காசி பகுதியில் 3860 விவசாயிகள் கடன் தொகையை 90 கோடியே 49 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆலங்குளத் தொகுதியில் 4300 விவசாயிகள் கடன் தொகை ரூபாய் 138.62 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது. ரூபாய் 15 கோடி மதிப்பில் தென்காசியில் நீதிமன்ற வளாக கட்டிடம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்புகள் கட்டப்பட்டது. 6.80 கோடி மதிப்பில் பள்ளிகளுக்கு வகுப்பறைகள், ஆய்வகம், கழிப்பறை, குடிநீர் வசதி,  கழிப்பறை,  சுற்றுச்சுவர் அமைத்துக் கொடுக்கப்பட்டது.

ரூபாய் 18 கோடி மதிப்பீட்டில் சுரண்டை அரசு காமராஜர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு வகுப்பறை கட்டிடங்கள், நூலகங்கள், உள்ளரங்கம், சுற்றுச்சுவர் அமைத்துக் கொடுக்கப்பட்டது. 5000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்பு கிடங்கு 6.25 கோடி மதிப்பீட்டில் பாவூர்சத்திரத்தில்அமைக்கப்பட்டது.  இவ்வளவு நாங்க செஞ்சி இருக்கிறோம் என பட்டியல் போட்டார்.