செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், இந்தியாவில் நீட் தேர்வு தோல்வி அடைந்திருக்கிறது. நீட் தேர்வு தேவையில்லை.  ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களின் தேவைக்கேற்ப நடத்திக் கொள்ள வேண்டும் என்ற அறிவிப்பை மத்திய அரசு செய்யணும். திமுக ஆட்சி வருவதற்கு முன்பாக சொன்னார்கள்….  நாங்கள் ஆட்சிக்கு வந்து ஒரு வாரத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொன்னார்கள். அப்போ ஒரு பொய்யான வாக்குறுதி கொடுக்கக் கூடாது. உண்மையா கொடுங்க….

இன்னைக்கு நீங்க போராடலாம்,  கையெழுத்து இயக்கம் பண்ணலாம்,  முட்டைய காமிக்கலாம். ஆனால் அன்னைக்கு நீங்க உண்மையை சொல்லி இருக்கணும். நாங்கள் முயற்சி பண்ணுவோம் என சொல்லி இருக்கணும். நீட் தேர்வை ரத்து செய்ய நாங்கள் முயற்சி செய்வோம் என்று சொல்லியிருக்கணுமே தவிர,  ஒரு வாரத்தில் நாங்கள் ரத்து பண்ணுவோம் என்று உறுதிமொழி கொடுத்து,  மக்கள் உங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.  அது மட்டும்  இல்ல பல வாக்குறுதிகளை திமுக அரசு கொடுத்தது,  இன்னைக்கு நிறைவேற்றாமல் இருக்கிறார்கள்.

முக்கியமான வாக்குறுதிகள் பார்த்தீங்கன்னா… மின் கட்டணம்,  மின் கணக்கடுப்பு மாத மாதம் நாங்க எடுப்போம் என்று சொன்னார்கள்…  ஆனால் இன்னைக்கு அதே நிலைமையில் தான் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால்…  இன்னைக்கு மின் கட்டணம் எல்லாம் விலை ஏத்திட்டாங்க. மின்சார கட்டணம் கட்ட முடியாத சூழ்நிலை இருக்கிறது.  போக்குவரத்து வரி  ஏத்திட்டாங்க… மின்சாரத்தை ஏத்திட்டாங்க… வீட்டு வரிகள் ஏத்திட்டாங்க…  அப்புறம் எல்லாம் ஏறி போச்சு….விலைவாசி ஏறி போச்சு என தெரிவித்தார்.