ஆஸ்திரேலியா நாட்டில் ஸ்வான் என்கிற மிகப்பெரிய ஆறு ஓடுகின்றது. இந்த ஆற்றில் நீரில் செல்லக்கூடிய மோட்டார் சைக்கிள் சவாரி மிகவும் பிரபலமானது. இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி தனது நண்பர்களுடன் நீரில் செல்லக்கூடிய மோட்டார் சைக்கிள் சவாரியில் ஈடுபட்டிருந்தார். அந்த சமயத்தில் சிறுமி ஆற்றல் கூட்டமாக வந்த டால்ஃபின்களை பார்த்த உற்சாகத்தில் திடீரென ஆற்றுக்குள் குதித்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவரை சுறா ஒன்று கடித்து தண்ணீருக்குள் இழுக்க முயற்சித்தது. இதனை கண்ட சிறுமியின் நண்பர்கள் சுறாவிடமிருந்து அவரை மீட்க முயற்சித்தனர். ஆனால் சுறா சிறுமியை விடாமல் கடித்து குதறியது. கடைசியில் சுறா சிறுமியை விட்டுவிட்டு ஆற்றுக்குள் சென்று விட்டது. இதனை அடுத்து சிறுமி உடனடியாக மீட்கப்பட்டது சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.