அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, புரட்சி தலைவி அம்மா சொன்னார் எனக்கு எங்க அம்மா,  அப்பா வைத்த பெயர் ஜெயலலிதா. ஆனால் என் தமிழ்நாட்டு மக்கள் என்னை அம்மா, அம்மா என்று அழைக்கிறார்களே…  அது தான் எனக்கு சிறப்பு. இது போதும்.. இவர்களுக்காக நான் இறுதிவரை பாடுபடுவேன் என்று சொன்னார்.

அதனால தான் இத்தனை திட்டம் வந்தது. மகளிருக்கான காவல் நிலையம்.  பெண் பிள்ளைகளுக்கு இரு சக்கர வாகன திட்டம்.  புரட்சித் தலைவி ஆண்களுக்கு நிகராக பெண்களால் சாதிக்க முடியும் என  கமாண்டோ படை கொண்டு வந்தாங்க. இங்க கூட போலீஸ் பெண்களாக இருந்தாங்க. SI கூட வந்து இருந்தாங்க .  பெண் SI போட்டு இருக்காங்க .

எவனும்   கிரிமினல் இருக்கனா என வந்து பார்த்துட்டு போறாரு. இந்த மாதிரி டிரஸ் போட்டு வராங்கன்னா…  இதெல்லாம் அம்மா உருவாக்குனது. பெண்ணை பார்த்து பயப்படுற ஒரு உணர்வை  கொண்டு வந்தாங்க. காவல்துறையில் பெண்கள் இருப்பது பெண்களுக்கெல்லாம் பெருமை.

கருவில் இருந்து கல்லறை செல்லும் வரை உதவி பண்ணிய ஒரு புரட்சி தலைவி  அம்மா தான். கர்ப்பிணியாக ஒரு குழந்தை கருவில் இருக்குன்னா…  அந்த தாய்க்கும்,  அந்த குழந்தைக்கு கருவில் இருந்து சத்தான உணவு கொடுத்து, ரூ. 18,000 கொடுத்து….  குழந்தை பிறக்க பரிசு பெட்டகம் கொடுத்து… அது பள்ளிக்கூடம் போறதுக்கு புக்ஸ், காலில்  ஷூ, அழகான  யூனிபார்ம், யூனிபார்ம் முன்ன மாதிரி கிடையாது. கலர் கலரா யூனிபார்ம். அதை போட்டாலே ஒரு அழகு.

அதை கொடுத்து, சத்துணவு திட்டம் கொண்டு வந்து…  இப்படி செஞ்சி அந்தப் பிள்ளை வளர்ந்த உடனே சைக்கிள் கொடுத்து… சைக்கிள்ல போய் படிச்ச உடனே…. பிளஸ் டூ படிக்கும் போது மடிக்கணினி கொடுத்து….  எப்படி அழகு பாத்தாங்க ? கல்லூரிக்குப் போக உதவி செஞ்சி… பயிற்சி பட்டறை கொடுத்து… இப்படி எல்லாம் செஞ்சவங்க தான் எங்க அம்மா.

அதை இந்த தாய்க்குலம் மறக்குமா? அதனாலதான் இந்த பெண்கள் இவ்வளவு தூரம் வந்தாங்க. என் தாய்மார்கள் இருக்காங்கன்னா…? இவ்வளவு நேரம்   செல்லூர் ராஜு பேசுறானா..?  எனக்காகவா இருக்காங்க ? அம்மாவை பற்றி என்ன பேசுறாங்க ? புரட்சித்தலைவர் பற்றி என்ன பேசுறாங்க ? கொள்ளை நோயை கட்டுப்படுத்திய எடப்பாடி பற்றி என்ன பேசுறாங்க ? என்ன சொன்னாரு ?

இந்த ஆட்சியினுடைய அவல நிலையை பற்றி என்ன சொல்கிறார்கள் ?  அப்படின்றதுக்காகத்தான் இங்க உக்காந்து இருக்கீங்க என்று கீழே உக்கார்ந்து இருந்த பெண்களை பார்த்து, என்ன ஆத்தா… அப்படி தானே… என்ன அம்மா.. உண்டு இல்லன்னு சொல்லுங்க … ஆடு மாதிரி தலையை தலையை ஆட்டுறீங்க.. மனுஷனுக்கு வாய் இருக்கு… ஆமாம்.. இல்ல… பொய் சொல்லுற அப்படின்னு சொல்லணும் என தெரிவித்தார்.