தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இருந்தாலும் பள்ளி விடுமுறை குறித்த எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. எனவே இன்று பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்பவர்கள் கையில் குடையுடன் செல்லுங்கள்.