செய்தியர்களிடம் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு,  சேரி என்பது பிரெஞ்சு வார்த்தை. அது தான் நான் சொன்னேன். நான் இதுவரை ஏதாவது ஒரு  ட்விட்டை   நீக்கி இருக்கேனா ?  டிஎம்கே, காங்கிரஸ்காரர்கள் என்ன பண்ணிட்டு இருக்காங்க ? பிரதமர் மோடியை நான் திட்டாத திட்டா. அதையெல்லாம் ட்விட்  எடுத்து போட்டு இருக்காங்க இல்ல. அந்த டிவிட்டையே நான் டெலிட் பண்ணல. ட்விட்  பதிவு பண்ணா பண்ணது தான்.. பயந்துட்டு பின்வாங்கக்கூடிய ஆளு குஷ்பு கிடையாது.

தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் கொடுப்பதற்கு திரிஷா தான் கொடுக்கணும்னு அவசியம் கிடையாது. யார் வேணும்னாலும் கொடுக்கலாம். கம்பளைண்ட் வந்தா நான் எடுத்துப்பேன். பாஜக எம்பி மேல வீராங்கனைகள் கொடுத்தாங்க. அவங்க மேல என்ன நடவடிக்கை என்ற கேள்விக்கு,  அந்த கேஸ் வந்து விசாரணையில் இருக்கும் போது அதை வெளியில சொல்ல முடியாது. இன்வெஸ்டிகேஷன் இருக்கும் போது எல்லாம் விஷயமும் உங்களுக்கு சொல்ல முடியுமா ? ஆக்சன் எடுத்து இருக்கிறோம்.

திரிஷா விஷயத்தில் தலையிட்ட மாதிரி மகளிர் வீராங்கனைகள் விவகாரத்திலும் தலைக்கேட்டேன். பேசுவது மட்டும் ஒரு தலைவனுக்கு அழகல்ல. கேட்கக் கூடியதுதான் நல்ல தலைவன். கொஞ்சம் கேட்டுக் கொள்ளுங்கள். நீங்க கேள்வி கேக்குறீங்க….. கேள்வி கேட்டா பதில் கொடுப்பதற்கு முன்னால் பேசாதீங்க… நானும் முடிக்கவே இல்ல உங்க கேள்விக்கான பதில் என தெரிவித்தார்.