
சனாதனம் எதிர்ப்பு மாநாட்டில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டதை கண்டித்தும், அவர் உடனே பதவி விலக வேண்டும் என்று இந்து சமய அறநிலைத்துறை அலுவலகங்கள் முன்பு தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி இன்று திருச்சியில் நடந்த போராட்டத்தில் அக்கட்சியில் மூத்த தலைவர் எச். ராஜா கலந்து கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.
இன்று திருச்சியில் கைது செய்யப்பட்டபோது pic.twitter.com/iwXzKkMAUH
— H Raja ( மோடியின் குடும்பம்) (@HRajaBJP) September 11, 2023
இதை தொடர்ந்து ட்விட்டரில் Xஇல்,ஸனாதன தர்மத்தை காப்போம் என்றதால் பாஜக வினர் கைது செய்யப்பட்டுள்ளோம். ஆனால் உதயநிதி சனாதனவாதிகளை மலேரியா, டெங்குஆகிய கொசு மருந்து கொண்டு கொள்ளுவோம் என்ற இந்து விரோதி உதயநிதிக்கு சல்யூட் அடிப்பார்கள் என தெரிவித்தார்.
ஸனாதன தர்மத்தை காப்போம் என்றதால் பாஜக வினர் கைது செய்யப்பட்டுள்ளோம். ஆனால் உதயநிதி சனாதனவாதிகளை மலேரியா, டெங்குஆகிய கொசு மருந்து கொண்டு கொள்ளுவோம் என்ற இந்து விரோதி உதயநிதிக்கு சல்யூட் அடிப்பார்கள்
— H Raja ( மோடியின் குடும்பம்) (@HRajaBJP) September 11, 2023