
திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஆய்வு மேற்கொண்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவருமான, சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்த போது, 15 கோடி ரூபாய் செலவில் மற்றும் 33 கோடி செலவில் நம்முடைய ஆதிச்சநல்லூர், சிவகளை போன்ற தமிழர்களுடைய பாரம்பரிய பிரதான சின்னங்களை பாதுகாப்பதற்கு மூன்று தலங்கள் கட்டப்படுவதற்கான இடங்களையும் குழு ஆய்வு செய்தது, தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.
தொல்லியல் துறை அலுவலர்களும், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களும் அங்கு நடைபெறுகின்ற பணிகள், அரங்கு எப்படி அமைக்கப்படுகிறது என்று வரைபடங்களுடன் குழுவுக்கு விளக்கம் அளித்தார்கள். அந்தப் பணி மிக தரமானதாக முடிக்கப்பட்டு, அது பொதுமக்களுடைய பயன்பாட்டிற்கு வரவேண்டும் என்று குழு பரிந்துரை செய்துள்ளது. இதுபோன்ற கள ஆய்வுப் பணிகளுக்கு பிறகு இந்த மாவட்டத்தில் மொத்தம் ஆக்சன் டெக் ரிப்போர்ட் என்று சொல்லக்கூடிய வகையில் ஏற்கனவே விவாதிக்கப்பட்ட 96 உறுதிமொழிகளில் தற்போது 31 உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
படித்து பதிவு செய்யப்பட்டவை 4. நிலுவையில் இருப்பது 61. Assuranceஆக இருக்கின்ற 172 உறுதிமொழிகளில் 72 உறுதிமொழிகள் முற்றிலுமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. படித்து பதிவு செய்யப்பட்டது 12. நிலுவையில் உள்ளவை 88. ஆக இந்த மாவட்டத்தில் இந்த ஆய்வுகளை மேற்கொண்டு சில பணிகளை இன்னும் 3 மாத காலத்திற்குள், ஒரு வார காலத்திற்குள்… சில ஊர்களுக்கு இரண்டு ரேஷன் கடைகளை பிரித்து தர வேண்டும். அதற்கு கூட்டுறவுத்துறை JR அவர்கள் பொறுப்பு. மாவட்ட ஆட்சி தலைவர் உடனடியாக கோப்பை அனுப்புங்கள். அதில் நானே கையெப்பமிடுகின்றேன். எந்த மக்களுக்கு பகுதி நேர கடை வேண்டுமோ உடனடியாக தனித்தனியா பிரித்து தாருங்கள் என்று உத்தரவிட்டு இருக்கின்றார்கள் என தெரிவித்தார்.